புதுச்சேரி அரசு தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா என்று எனக்கே தெரியவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடத்தில் முதல்வர் ரங்கசாமி பேசிய சம்பவம் புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா காலத்தில் 240 செவிலியர்கள் சுகாதாரத் துறையில் பணிக்காக அமர்த்தபட்டனர். இவர்களுடைய ஒப்பந்த பணிக்காலம் இம்மாத இறுதி உடன் முடிவடைகிறது. இந்நிலையில் மீண்டும் சுகாதாரத்துறைக்கு செவிலியர்கள் பணியில் அமர்ந்த 140 பேர் தேவையான சுகாதாரத்துறை சார்பில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே சுகாதாரத் துறையில் பணிபுரிந்த செவிலியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று அனைத்து செவிலியர்களும் சீருடை உடன் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம் சம்பத் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது 140 செவிலியர்கள் காலிபணியிடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் தங்களை பணிக்கு அமர்த்தப்பட்ட பிறகு மற்றவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நீங்கள் சொல்வது போன்று அரசாங்கம் தற்போது கிடையாது. அரசாங்கம் எனது கட்டுப்பட்டு தான் இருக்கிறதா என்று எனக்கே தெரியவில்லை. அரசு விழாக்கு சென்றால் கூட தனது பெயர் கல்வெட்டில் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலைமை உள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.
மது பாட்டில்களின் குவியலாகவும், நாய்களின் உறைவிடமாக காட்சி அளிக்கும் அம்மா உணவகம்- திமுக அரசை விளாசும் ஓபிஎஸ்
மேலும், அரசு துறையில் பல்வேறு துறை அதிகாரிகள் தானாக ஓய்வு பெற விருப்பம் கேட்டு வருகிறார்கள். இவ்வாறு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை முதல்வர் சீட்டில் இருந்து எழுந்து பக்கமாக அப்படியே சென்று விடலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது என விரக்தியுடன் முதலமைச்சர் ரங்கசாமி பேசியது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரங்கசாமி உள்ளார். இருந்தும் அவரால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. புதிதாக திட்டங்களை அறிவித்தால், அதை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தலைமை செயலாளர் ஒரு பக்கம் அதிகாரிகளை தன் கைக்குள் வைத்துக்கொண்டு திட்டங்ளை செயல்படுத்த விடாமல் தனிகாட்டு ராஜாவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. பாஜக அமைச்சர்கள் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.