புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்; ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 28, 2023, 3:23 PM IST

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31 கோடியில் திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.


புதுச்சேரியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் உழவர் கரை நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மின்விளக்குகள் அமைத்தல், தெருக்கலுக்கான பெயர் பலகைகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் மற்றும் வணிக வளாகங்கள் அமைத்தல் பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், நவீன முறையில் நடை பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest Videos

undefined

இதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 31 கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி பேருந்து நிலையத்தை திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக மாற்றுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

Crime News Today: மது போதையில் தம்பியை போட்டு தள்ளிய அண்ணன் கைது; திருவாரூரில் பரபரப்பு

 அப்பொழுது பூஜை முடிந்து முதல்வர் திரும்பும்போது ஒன்று திறண்ட ஆட்டோ ஓட்டுநர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். முதல்வர் சென்றவுடன் காவல் துறையினரை சூழ்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள். பேருந்து நிலையம் அமைப்பதற்கான தகவல் எங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை. மேலும் பேருந்து நிலையத்தில் 15 ஆட்டோக்கள் மட்டுமே நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தண்ணீர் வசதி கூட இல்லை; எம்எல்ஏவை மண்டபத்திற்குள் வைத்து பூட்டு போட்ட கிராம மக்கள்

ஆனால் பேருந்து நிலையத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பேருந்து நிலையம் எங்கு மாற்றப்படுகிறது? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற தகவலும் இல்லை என்று குற்றம் சாட்டினர். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் முதல்வரை சந்தித்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!