அந்த இளைஞர் உடனடியாக அந்த பிளக் பாயிண்டை திறந்து பார்த்தபொழுது அதன் உள்ளே ரகசிய கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
தமிழகத்துக்கு மிக அருகாமையில் இருக்கும் புதுச்சேரி மிக பிரபலமான ஒரு சுற்றுலா தளம் என்பதை நாம் அறிவோம். சென்னை உள்ளிட்ட பல பெரு நகரங்களுக்கு மிக மிக அருகாமையில் உள்ளதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். வாரத்தின் இறுதி நாட்கள் மட்டுமின்றி வருடத்தின் எல்லா நாட்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிக அளவில் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அங்கு சிறுரக லாட்ஜில் இருந்து மிகப்பெரிய ரிசார்ட்கள் வரை வாடகைக்கு கிடைக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியுடன் ஒரு ஹோட்டலில், ரூம் எடுத்து தங்கி உள்ளார். அந்த ஹோட்டல் அறையில் முதல் நாளை கழித்த ஜோடி, இரண்டாம் நாள் உறங்க செல்லும் முன் சுவற்றில் இருந்த பிளக் பாயிண்ட் அருகே ஏதோ வெளிச்சம் விட்டுவிட்டு மின்னுவதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்கள்.
ராணிப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதி கவலைக்கிடம்
அந்த இளைஞர் உடனடியாக அந்த பிளக் பாயிண்டை திறந்து பார்த்தபொழுது அதன் உள்ளே ரகசிய கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார். அறையில் நடக்கும் விஷயங்கள் அதில் பதிவாகி உள்ளது என்பதை அறிந்து கொண்ட அவர், உடனடியாக அந்த கேமராவை கழட்டி ஹோட்டல் ஊழியர்களிடம் எடுத்துக் கொண்டு போய் அது குறித்து கேட்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர்கள் தங்களுக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அந்த இளைஞரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இறுதியாக அருகில் இருந்த காவல் நிலையத்திலும் இதுகுறித்து அந்த இளைஞர் புகார் அளித்தபோது போலீசார் முதலில் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது அந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
திருச்சி பேருந்து நிலையத்தில் சாமானிய பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் போலீஸ்