ஆயிரக்கணக்கான புதுச்சேரி வாழ் பிரெஞ்சு மக்கள் கைகளில் வண்ண விளக்குகளை பிடித்தபடி ஆட்டம் பாட்டத்துடன் கடற்கரை சாலையில் பேரணியாக சென்றனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை நினைவு கூறும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் மாலை இந்திய - பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடி வண்ணத்தில் வண்ண விளக்குகளை கையில் ஏந்திய படியும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஈபிள் டவர் முன்னே செல்ல புதுச்சேரி வாழ் பிரெஞ்சு மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
undefined
தேனியில் குடிநீர் குழாய் தடுக்கி கீழே விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
கடற்கரை சாலையில் டூப்ளே சிலை அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை புதுச்சேரி பிரெஞ்சு துணைத்தூதர் லிசே டல்போட் பரே தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான புதுச்சேரி வாழ் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் கலந்து கொண்டு சினிமா பாடலுக்கு நடனங்கள் ஆடியும் ஆட்டம் பாட்டத்துடன் பேரணியாக சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள்
இதனை ஒட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது இதை பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது.