பரோட்டா சாப்பிட்டு படுத்த இன்ஜினியர் உயிரிழப்பு; பரோட்டா பிரியர்கள் அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published Mar 15, 2023, 2:51 PM IST

புதுச்சேரியில் ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா சாப்பிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் படுக்கையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் ஏராளமான அசைவ உணவுகங்கள் உள்ளன. பரோட்டா, பிரியாணி, தலைக்கறி, போட்டி கறி என வகை வகையாக அசைவ உணவுகள் கொண்ட பட்டியல் எங்கு பார்த்தாலும் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால், கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமையல் கூடங்கள் மிகவும் மோசமாக பராமரிக்கப்படுகின்றன.

புதுச்சேரி வில்லியனுார் அருகே ஆரியப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் சத்திய மூர்த்தி (வயது 33). பொறியியல் பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். கொரோனா கால கட்டத்திற்கு முன்பு இருந்தே சில மாதங்களாக வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வந்தார்.

Tap to resize

Latest Videos

அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறை தாத்தா வீட்டிற்கு சென்ற உதயநிதிக்கு பூரண கும்ப வரவேற்பு

நேற்று மாலை மனைவி சுகந்தியுடன் பொருட்கள் வாங்குவதற்காக புதுச்சேரி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் பிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா வாங்கியுள்ளார். பின்னர் இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தவர் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு படுத்துள்ளார். 

இந்த நிலையில் விடியற்காலையில் சத்தியமூர்த்தி மூச்சு பேச்சின்றி படுக்கையில் கிடந்ததை கண்டு அவரது மனைவி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தியமூர்த்தியை வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், சத்தியமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ

 இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து  வருகின்றனர். இதையடுத்து, புதுச்சேரி உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள்  சுல்தான்பேட்டையில் இருக்கும் பரோட்டா மற்றும் பிரியாணி கடைகளில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!