ஆத்திரமடைந்த டிரைவர் லாரியின் பின் கதவை திறந்து விட்டு லோடுமேனை முன்னாடி தொங்கவிட்டபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் வழியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் இருந்த கண்டெய்னரின் கதவுகள் திறந்து விடப்பட்டும் ஒருவரை ஓட்டுநருக்கு அருகே லாரியின் வெளிப்புறமாக தொங்கவிடப்பட்டும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
மேலும் லாரியின் பின்புறம் இருக்கும் கதவை திறந்து இருந்ததால் சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதி வேகமாக சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் சாலையிலிருந்து பதறியடித்தப்படி ஓடினர். இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் ஒரு சிலர் கோட்டகுப்பம் காவல் துநையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் வேகமாக லாரியை விரட்டி சென்று மடக்கினர்.
போட்டி தேர்வுகளுக்கான அரசின் இலவச வகுப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் லாரியில் தொங்கியபடி சென்ற லோடுமேனையும் அவரை தொங்கவிட்ட ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் லோடுமேன், ஓட்டுநர் இருவருக்கும் குடிபோதையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் லோடு மேனை வாகனத்தின் வெளிப்புறத்தில் தொங்கவிட்ட நிலையில் ரோட்டில் லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்
இதனை அந்த பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.