மருத்துவர்களின் கவனக்குறைவால் பிரசவத்திற்கு வந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி புகுந்துவிட்டது. இதனால் அந்தப் பெண் தாங்கமுடியாத இன்னல்களை அனுபவிக்கிறார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது அத்துடன் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கான தண்டனைக் கட்டணமாக ரூ.2 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ.25 ஆயிரமும் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழு தனது பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசியை வைத்துவிட்டதாக அந்தப் பெண் தன் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
Dogs vs Bikes: பைக்கில் செல்பவர்களை நாய்கள் துரத்துவது ஏன்?
உடலில் சில சிக்கல்களுடன் பிறந்த குழந்தை உடனடியாபக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது. குடும்பத்தினர் யாரும் குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், டிசம்பர் 13, 2016 அன்று எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் உடைந்த ஊசியின் ஒரு பகுதி, தாயின் பிறப்பு உறுப்பில் பதிந்திருப்பது தெரியவந்தது. இதைப்பற்றி அந்த பெண்ணிடமும் குடும்பத்தினரிடமும் தெரிவிக்காமலே மருத்துவமனை நிர்வாகம், அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசியை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றது.
மூன்று மணிநேரம் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் பெண்ணின் உடல்நிலை மேலும் சிக்கலானது. பெண்ணின் குடும்பத்தினர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேறு மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர். ஆனால் மருத்துவமனை அதிகாரிகள், அந்தப் பெண் தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற ஒப்புக்கொள்வதாக, பெண்ணின் கணவர் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றனர்.
வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
இந்நிலையில், ஊசியின் பாகம் இன்னும் தன் உடலில் பதிந்திருப்பதாகவும், அதனால் அளவில்லாத கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில், உடைந்த ஊசி பெண்ணின் பிறப்பு உறுப்பில் பதிந்திருப்பதை ஒப்புக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அப்பகுதியில் ஏற்பட்ட அழற்சியின் காரணமாக அறுவை சிகிச்சையின்போது ஊசியைக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பிறப்பு உறுப்புக்கு அதிக சேதம் ஏற்படாமல் இருக்க, தற்காலிகமாக ஊசியின் துண்டை அகற்றாமல் விட்டுவிட அறுவை சிகிச்சை குழு முடிவு செய்துள்ளது. நோயாளியிடமும் அவரது உறவினர்களிடமும் நிலைமையை விளக்கியுள்ளது. மூன்று மாத காலத்திற்குப் பிறகுதான் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியும் என்றும் அதுவரை சிகிச்சைக்கு ஆளும் முழு செலவையும் தாங்கள் ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளை குழிகளை மூட 3 மாத அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு