பெற்றோர் கண்டித்ததால் விரக்தி; 10 வகுப்பு மாணவி விபரீத முடிவு

By Velmurugan s  |  First Published Mar 4, 2023, 8:08 PM IST

தோழிகளுடன் அதிகமாக பழகாதே என்று பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ராமநாதபுரம் மாஞ்சாலை வீதியைச் சேர்ந்தவர்கள் முருகன் -சாந்தி தம்பதி, கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இவரது இளைய மகள் அருகிலுள்ள பிள்ளையார் குப்பம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

உடன் படிக்கும் சக தோழிகளுடன் அதிக நெருக்கம் கொண்ட இவரை கடந்த சில தினங்களாக பெற்றோர்கள் தோழியிடம் அதிகம் பேச வேண்டாம் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மன உளைச்சலில் இருந்த சிறுமி வெள்ளிக்கிழமை மாலை தனது தோழிகளுடன் பேசிக்கொண்டே வீடு நோக்கி வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்தார். இதனால் செய்வது அறியாத திகைத்த உடன் வந்த தோழி கூச்சலிட்டு முருகன் வீட்டிற்கு ஓடிவந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பதறியடித்து சென்று பார்க்கும் பொழுது மாணவி பாழுங்கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தி பேசியதால் 12 பேர் கழுத்தறுத்து கொலை? வதந்தி பரப்பி உ.பி. இளைஞருக்கு எதிராக அதிரடி

மேலும் அந்தக் கிணறு குப்பை கூலங்கள் நிறைந்த கிணறாக இருந்ததால் மாணவியை மீட்பதில் சிக்கல் நிலவியது. இதனையடுத்து வில்லியனூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லியனூர் காவல் துறையினர் மற்றும் வில்லியனூர், தன்வந்திரி நகர் தீயணைப்பு வீரர்கள்  கிணற்றில் ஏணியை வைத்து இறங்கி கயிறு கட்டி மாணவியை உயிரிழந்த நிலையில் வெளியி்ல் கொண்டு வந்தனர்.

click me!