மாசி மகத்தை முன்னிட்டு வருகின்ற செவ்வாய் கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி மகம் நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் தீரும். அப்படி செல்ல முடியாதவர்கள் வீட்டு அருகில் இருக்கும் நீர் நிலைகளில் நீராடி வேண்டினாலும் பலன் கிடைக்கும். அன்றைய தினம் முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தால் பித்ரு சாபம் நீங்கி ஏழு தலைமுறை பாவங்கள் தீரும் என்பது இந்துமத நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
டெலகிராமில் கல்லூரி பெண்களை ஏலம் விட்ட வாலிபர்; சைபர் கிரைம் காவல்துறை அதிரடி
undefined
இந்த நாளில் பக்தர்கள் பலரும் விரதமிருந்து தங்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்று பொங்கல், படையலிட்டு வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், மாசி மகமான வருகின்ற 7ம் தேதி (செவ்வாய் கிழமை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரம்? பெண் கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை
மேலும் அன்றைய தினம் மேல் நிலை வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.