சொத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்தும் மகன்; முதியோர் கண்ணீர் மல்க மனு

Published : Feb 27, 2023, 05:36 PM ISTUpdated : Feb 27, 2023, 05:37 PM IST
சொத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்தும் மகன்; முதியோர் கண்ணீர் மல்க மனு

சுருக்கம்

தங்களது சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு சோறு தண்ணி போடாமல் தங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவதாக புகார்.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் 71 வயதான ரங்கநாதன். பொதுப்பணித்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி இருவருக்கும் குமரகுரு என்ற மகனும் சசிகலா என்ற மகளும் உள்ளனர். இதில் குமரகுரு காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி தனி குடும்பம் நடத்தி வருகின்றனர்.

வயதான கணவன் - மனைவி இருவருக்கும் இருதய நோய் இருந்ததன் காரணத்தினால் கருவடிகுப்பத்தில் உள்ள தங்களது வீட்டை மகன் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எழுதியுள்ளனர். உடல்நிலை சரியானவுடன் ரங்கநாதன் குத்தகையை தனது பெயருக்கு  மாற்றி எழுத மகனிடம் கூறியுள்ளார். அப்போது அவரது மகன் குமரகுரு மாற்றி கொடுத்துள்ளார்.

வெகு நாள் கழித்து சந்தேகம் அடைந்த ரங்கநாதன் தற்பொழுது அதற்கான வில்லங்கம் எடுத்துப் பார்க்கும் பொழுது தன்னுடைய பெயரில் இருக்க வேண்டிய வீடு மகன் பெயருக்கு மாறி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மகனிடம் கேட்டபொழுது நான் அப்படித்தான் செய்தேன். இனிமேல் உங்களுக்கு சோறு, தண்ணி கிடையாது வீட்டை நீங்கள் காலி செய்துவிடலாம் என்று கூறி மிரட்டி உள்ளார்.

மகன் ஏமாற்றியதை அறிந்த வயதான தம்பதியினர்  மாவட்ட ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து இன்று புகார் அளித்தனர். அந்த மனுவில் தங்களது சொத்தை மீட்டு தர வேண்டும். வயதான தங்களுக்கு அந்த வீடு மட்டும் தான் சொத்தாக உள்ளது. மேலும் மகன் தங்களுக்கு சோரு போடாமல் தங்களை வீட்டை காலி செய்யுமாறு  கூறி மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக கணவனின் தொல்லை தாங்காமல் குழந்தையுடன் கடலில் குதித்து பட்டதாரி பெண் தற்கொலை

புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் சொத்துக்களை மீட்டுத் தருவதாக உறுதி அளித்தார். தாய் தந்தைக்கு வயதான காலத்தில் சோறு போட வேண்டிய  மகன்களே சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை..! கெஞ்சிப் பார்த்த தவெகவினர்..! கையை விரித்த புதுவை முதல்வர்!
விஜய்யின் பேர கேட்டாலே நடுங்கும் ஆளும் கட்சி.. புதுவையில் ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்க தயங்கும் அரசு..