Puducherry : 100 சதவீதம் உயர்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை செலவு.. ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

By Raghupati R  |  First Published Feb 25, 2023, 12:20 AM IST

தெலங்கானா மாநில ஆளுநராக மட்டுமல்லாமல், புதுச்சேரி ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன்.


புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இது கடந்த பட்ஜெட்டை விட ரூ.1000 கோடி அதிகம். இச்சூழலில் வரும் மார்ச் 9-ம் தேதி காலை 9. 45 மணிக்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்ற உள்ளார் என்று சட்டப்பேரவைச்செயலர் தயாளன் ஆளுநர் ஒப்புதலுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கலாகும் தேதி வெளியாகும்.

வரும் வாரங்களில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசு நிதியில் இருந்து தான் பணம் செலவழிக்கப்படும். இந்நிலையில் ஆர்டிஐ மூலம் வந்த தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

அதாவது, 2010–11ல் ரூ.3 கோடியே 9 லட்சமாக இருந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையின் செலவு, 2021–2022ல் 6 கோடியே 58 லட்சமாக உயர்ந்துள்ளது.2011–12ல் ரூ. 2 கோடியே 92 லட்சமாகவும், 2012–2013ல் ரூ.3 கோடியே 82 லட்சமாகவும், 2013–2014ல் ரூ. 3 கோடியே 50 லட்சமாகவும், 2014–2015ல் ரூ. 3 கோடியே 55 லட்சமாகவும் இருந்துள்ளது. 2016ம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார். 2020–2021ல் ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 6 கோடியே 30 லட்சமும், 2021–2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 7 கோடியில், 6 கோடியே 58 லட்சம் செலவு செய்துள்ளது புதுச்சேரி ஆளுநர் மாளிகை.

கடந்த 2011ம் ஆண்டு ரூ.1 கோடியே 41 லட்சமாக இருந்த ஆளுநர் மாளிகை பணியாளர்களின் சம்பளச் செலவு, 2022ல் ரூ 2 கோடியே 6 லட்சமாக உயர்ந்தது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக சம்பளம் பெறுவதால், புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் சம்பளம் பெறுவதில்லை.

ஆளுநர் / துணை நிலை ஆளுநர் – ரூ 3.5 லட்சம், ஆளுநரின் செயலர் – ரூ 1.33 லட்சம், ஆளுநரின் தனி செயலர் – ரூ 1.31 லட்சம், ஆளுநர் செயலரின் தனி செயலர் – ரூ 1.29 லட்சம்,  கண்காணிப்பாளர் – ரூ 96,708 என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!

தனியார் நியூஸ் சேனலான நியூஸ் 18 தமிழ் கேட்டு கொண்டதின் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

click me!