புதுவை - தமிழகம் இடையே குட்டி விமான சேவை

By Velmurugan s  |  First Published Feb 25, 2023, 4:09 PM IST

ஏர் சபா நிறுவனத்தின் சார்பில் சிறிய ரக விமானம் புதுச்சேரியில் இருந்து கோவை, திருப்பதி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்க ஏற்பாடு.


புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுலாவை பெருக்கும் வகையிலும் பயணிகளின் நலன் கருதியும் ஏர் சபா நிறுவனம் சார்பில் புதுச்சேரி - சென்னை, புதுச்சேரி - திருப்பதி, புதுச்சேரி - கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சிறிய ரக விமானம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். இன்னும் சில மாதம் கழித்து இந்த விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் புதுச்சேரிக்கு வந்த விமானத்தை முதலமைச்சர் அமைச்சர்கள் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளனர்.

click me!