புதுவையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலாப்பயணிகளை அப்பகுதி மக்கள் கற்களால் தாக்கி துரத்தி அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகளால் புதுச்சேரி நிரம்பி வழியும். அதாவது புதுச்சேரி மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி நோக்கி படையெடுப்பார்கள். இதனால் அந்த மூன்று நாட்களும் புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாவதும், பல்வேறு குற்ற சம்பவங்களும் நடந்து வருவதுமாக இருந்து வருகிறது.
மேலும் சிலர் நள்ளிரவு வரை குடித்துவிட்டு சாலையில் ரகலையில் ஈடுபடுவதால் உயிரிழப்புகளும் புதுச்சேரியில் அப்பாவிகளும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நிலையில் நேற்று கடற்கரை சாலையில் உள்ள வணிக வளாகத்திற்குள் புகுந்த சுற்றுலா பயணிகள் குடிபோதையில் கடுமையான ரகளை ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் ஒருவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.
வியாபாரியிடம் நூதன முறையில் 1.27 கோடி கொள்ளை; 12 மணி நேரத்தில் அதிரடி காட்டிய காவல்துறை
தொடர்ந்து பொதுமக்கள் எவ்வளவு கூறியும் சுற்றுலா பயணம் கேட்காததால் அங்கு குடியிருந்த மக்கள் ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து கற்களை எடுத்து சுற்றுலா பயணிகளை விரட்டி அடித்தனர். இதனால் நாலாபுரமும் அவர்கள் சிதறி ஓடியதால் கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
வீடுகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு ரகலையில் ஈடுபடுவதும் பல்வேறு சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறையினரும் இதனை கண்டுகொள்வதில்லை. எனவே இவர்களை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை புதுச்சேரியை சேர்ந்தவர்கள் கற்களால் விரட்டி அடிக்கும் வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.