சரித்திரத்தை மறைக்கவே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி ஒரு தமிழனாகவே செயல்பட்டு வருகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.
சரித்திரத்தை மறைக்கவே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி ஒரு தமிழனாகவே செயல்பட்டு வருகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.
புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகத்தில் கடந்த 2ம் தேதி புறப்பட்ட கடல் சாகச பயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சாகச பயணம் புதுச்சேரி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார்,காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று 10 நாட்கள் நிறைவு செய்து மீண்டும் புதுச்சேரி திரும்பிய என்.சி.சி. மாணவர்களை ஆளுநர் தமிழிசை வரவேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரியில் எந்த ஒரு நல்லது ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கு ஆளுநரின் ஒத்துழைப்பு இருக்கும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக ஆகக்கூடிய வாய்ப்பை திமுகவால் தான் மறுக்கப்பட்டது என்று கூறிய தமிழிசை, அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக வருவதை தடுத்தது திமுகவும் காங்கிரசும் தான் என்று கூறினார். இந்த சரித்திரத்தை அண்ணன் ஸ்டாலின் மறைப்பதற்காக பேசுகிறார் ஏதேதோ பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
CoWIN இணையதளம் தனிப்பட்ட நபரின் பிறந்த தேதி போன்ற விவரங்களை கேட்கவில்லை; மத்திய அரசு அதிரடி பல்டி!!
பிரதமர் நரேந்திர மோடி போல் தமிழை யாரும் கையாண்டது இல்லை என்றும், திருக்குறளையும், பாரதியையும் வாசித்தது இல்லை எனத் தெரிவித்தார். மேலும், தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி போன்று யாரும் பின்பற்றியதில்லை என்று கூறிய தமிழிசை, பிரதமர் மோடி ஒரு பச்சை தமிழராகவே செயல் பட்டுக்கொண்டிருக்கிறார், செங்கோல் ஏந்தி அதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார் என்றார்.