புதுவையில் புல் போதையில் நடு ரோட்டில் அமர்ந்து அட்டகாசம் செய்த இளம் பெண்

By Velmurugan s  |  First Published May 15, 2023, 12:27 PM IST

புதுச்சேரியில் இளம்பெண் ஒருவர் குடி போதையில் சாலையின் நடுவே அமர்ந்துகொண்டு அட்டகாசம் செய்யும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி நகரப் பகுதியில் நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் ஏற்கனவே இயங்கி வரும் நிலையில்,  தற்போது ரெஸ்டோபார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மதுபான பார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் குடியிருப்புகள், கோவில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதோடு நள்ளிரவு வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி அளிக்கப்படுவதால், நள்ளிரவுக்கு மேல் மதுஅருந்தி கொண்டாடி விட்டு, நள்ளிரவு, அதிகாலைக்கு மேல்தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்  சமீபகாலமாக ஆங்காங்கே போதையில் இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி; 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்

இதுபோன்ற ஒரு சம்பவத்தில்தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லப்போர்தனே வீதியில் இருசக்கர வாகனத்தில்  சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி விஷால் (25) என்ற வாலிபரை ஒரு கும்பல் தாக்க முயன்றபோது, அவர் நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதி பலியாகினார்.

தற்போது அதே வீதியில்  உள்ள ரெஸ்டோ பாரில் குடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் போதையில் சில இளைஞர்களும் சாலையை மறித்துகொண்டு சிகரெட் பிடிப்பதும், பெண் ஒருவர் அட்டகாசம் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சாலையில் நடுவே அமர்ந்துகொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக ரகளையில் ஈடுபடுவதும், அவரை சில இளைஞர்கள் சமாதானம் செய்து அழைத்து செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அந்த இளம்பெண் மற்றும் இளைஞர்கள் குறித்து ஒதியன்சாலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!