புதுச்சேரியில் பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் குட்டி கரப்பான்பூச்சிகள் கொட்டிக் கிடந்தது வாடிக்கையாளர்களை ஷாக் ஆக வைத்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் டேனியல். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். மதியம் தனது நண்பர்களுடன் புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள 'காப்பர் கிச்சன்' (Copper Kitchen) உணவகத்துக்குச் சென்றனர்.
ஹோட்டலில் பிரியாணி மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி என ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பிரியாணிக்குள் கரப்பான் பூச்சிகள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே உணவக ஊழியர்களை அழைத்து புகார் செய்தனர்.
undefined
சிபிஐ இயக்குநராகும் கர்நாடக டிஜிபி பிரவீன் சூத்! டி.கே. சிவகுமாருக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன?
அதற்கு பதில் அளித்த ஹோட்டல் ஊழியர்கள், நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்பு கோரினர். பிரியாணிக்குள் கரப்பான்பூச்சிகள் வந்தது எப்படி என்று தெரியவில்லை எனவும் சாப்பிட்டதற்கு பில் கொடுக்க வேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறார்கள். ஹோட்டல் ஊழியர்கள் பொறுப்பில்லாமல் பதில் சொல்வதாகக் கருதிய டேனியலும் அவரது நண்பர்களும் ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்றுவரும் டேனியல், ஹோட்டல் நிர்வாகத்தினர் தாங்கள் செய்த தவறை கடைசி வரை புரிந்துகொள்ளவே இல்லை என்று வேதனை தெரிவிக்கிறார்.
டெல்லி ஆர்ட் கேலரியில் ஜன சக்தி கண்காட்சி! மன் கீ பாத் உரைகளைக் ஓவியமாக்கிய கலைஞர்கள்!
புதுச்சேரி 100 அடி ரோட்டில் பிரபல உணவகத்தில் கரப்பான்பூச்சி விழுந்த பிரியாணி பரிமாறப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசின் உணவு பாதுகாப்புத்துறை உணவகங்களில் முறையாக சோதனைகள் நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் திரும்ப நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.