நகராட்சி இடத்தில் மரம் வளர்ப்பதில் தகராறு; எதிர்வீட்டு பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீ வைத்த நபர் கைது

By Velmurugan s  |  First Published May 13, 2023, 6:42 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மரம் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பக்கத்து வீட்டு பெண்ணின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, பெண்ணை தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


காரைக்காலில் நடுவோடு துறை பகுதியில் வசிப்பவர் காமராஜ். இவர் புதுச்சேரி சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வாசுகி, இவர்கள் வீட்டுக்கு எதிர் புறம் வசிப்பவர் வேலு. இவர்கள் வீட்டு எதிர் புறம் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் மரம் நடுவது தொடர்பாக இரு குடும்பத்திற்கும் சமீபகாலமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்திற்கும் சண்டை தீவிரமடைந்து அதில் காமராஜரின் மனைவி வாசுகிக்கும் வேலுக்கும் நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த வேலு வாசுகி வீட்டினுள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது ஸ்கூட்டரை இழுத்து வந்து தீயிட்டு  எரித்துள்ளார். இந்த நிலையில் வேலுவின் மனைவியும், மகளும் வேலுவை தடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு கட்டையால் காமராஜரின் மனைவி வாசுகி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.

Tap to resize

Latest Videos

undefined

கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி - எம்.பி.திருநாவுக்கரசு பேட்டி

இதனால்  காயமடைந்து வாசுகி  நேற்று இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து  காரைக்கால் நிரவி காவல் துறை ஆய்வாளர் லெனின் பாரதி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பெருமாள்  மருத்துவமனைக்கு சென்று  வாசுகியிடம் விசாரணை செய்து வேலுவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் இருந்த வேலுவை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அரியலூரில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மரம் நடும் பிரச்சினையில்  ஒரு ஸ்கூட்டரை எரித்து  பெண்ணை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!