தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! திமுக கூட தமிழகத்தில் பலமுறை தூக்கி எறியப்பட்ட கட்சிதான்! - எல்.முருகன்!

By Dinesh TG  |  First Published May 15, 2023, 11:07 AM IST

புதுச்சேரிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வைத்திக் குப்பத்தில் உள்ள மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 


புதுச்சேரிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வைத்திக் குப்பத்தில் உள்ள மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதற்கு முன்பாக அவர் வைத்திக்குப்பத்தை சேர்ந்த மீனவர் கதிரவன் என்பவரது வீட்டில் காலை உணவை அருந்தினார். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மத்திய அரசால் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பேசிய குறிப்புகள் சில...

கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்ச காலத்தில் வெறும் 3000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் நரேந்திர மோடி பிரதமராக வந்த 9 ஆண்டுகளில் மீனவர்களுக்கென்று தனித்துறை ஏற்படுத்தப்பட்டு சுமார் 38,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது இதை வைத்து எல்லாம் எதுவும் சொல்ல முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகம் கூட தமிழகத்தில் பலமுறை தூக்கி எறியப்பட்ட கட்சி, எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது என்று குறிப்பிட்ட எல். முருகன் தமிழகத்தில் பலமுறை துடைத்து எறியப்பட்ட கட்சி தான் திமுக என்றார்.

தமிழகத்தில் பாஜக இன்று மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியோட ஆட்சி நடைபெற்று வருகிறது இங்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

தமிழக முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின் திராவிட மண்ணிலிருந்து பாஜக அகற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் அவரோட திருப்திக்கு அவர் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்றார்.



கர்நாடகாவில் கடந்த 2018-ல் என்ன வாக்கு சதவீதம் இருந்ததோ அதே வாக்கு சதவீதம் தற்பொழுதும் இருந்து கொண்டு உள்ளதாக எல். முருகன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா பாஜக மாநில தலைவர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வி. பி, ராமலிங்கம் மற்றும் வைத்தி குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பாஜக நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

Latest Videos

click me!