அரசு அலுவலகங்களில் பணிப்புரியும் பெண்களுக்கு வேலை நேரத்தில் சலுகை வழங்கி புதுவை ஆளுநர் மற்றும் முதல்வர் அறிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் பணிப்புரியும் பெண்களுக்கு வேலை நேரத்தில் சலுகை வழங்கி புதுவை ஆளுநர் மற்றும் முதல்வர் அறிவித்துள்ளனர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, காசநோயை ஒழிக்க அனைத்து முயற்சி நடக்கிறது. இதுவரை 27 ஆயிரம் பேருக்கு எக்ஸ்ரே எடுத்துள்ளோம். வேறு மாநிலங்களைவிட அதிக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதா? அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
undefined
பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தர கோரிக்கை வைத்தேன். அதை முதல்வர் ஏற்றுள்ளார். தற்போது அரசு துறையில் அமலாகும். வெள்ளிக்கிழமை காலையில் சலுகை தந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆயிரம் ரூபாய் செல்வ சலுகையும், நேர சலுகையும் தரப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் மது போதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற 5 பேருக்கு வலை
கோப்புக்கு கையெழுத்திட்டுள்ளேன். ஆக்கமும், ஊக்கமும் உடன் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டியுள்ளது. உலகம் முழுவதும் இதுசெயல்படுத்துவதாக கருத்துதான் சொன்னேன். முதல்வர், அமைச்சர் பேசிதான் புதுச்சேரியில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.