முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்; பாஜக எம்எல்ஏ மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Apr 27, 2023, 4:28 PM IST

புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னையும், குழந்தைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக அவரது முதல் மனைவி குற்றம் சாட்டி உள்ளார்.


புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கல்யாண சுந்தரம்.. இவருக்கும் சென்னை சூலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் கல்யாணசுந்தரம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல், பெண் வீட்டாரின் முழு சம்மதத்துடன் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு கல்யாணசுந்தரம் அவ்வப்போது சென்னைக்கு சென்று முதல் மனைவியை சந்தித்து வந்துள்ளார். இதனை அடுத்து கல்யாணசுந்தரமும் எல்லம்மாளும் சேர்ந்து வாழ்ந்ததில் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் முதல் மனைவி இருக்கும் போது அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் இரண்டாவது கல்யாணசுந்தரம் எம்எல்ஏ திருமணம் செய்துகொண்டார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த திருமணம் முதல் மனைவிக்கு தெரிய வரவே இதனால் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்ட எல்லம்மாள் சண்டையிட்டு இருந்தார். அப்போது முதல் மனவியை  சமாதானம் செய்வதற்காக உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சமாதானம் பேசி அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்ததால் மீண்டும் கல்யாண சுந்தரத்திற்கும் எல்லாலுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 15 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தவர்கள் தற்போது நான்கு மாதங்களாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்த முதல் மனைவி எல்லம்மாள் இன்று கருவடி குப்பத்தில் உள்ள கணவர் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ வீட்டு முன்பு நீதி கேட்டு முற்றுகையிட்டார். இதற்கு எந்த பதிலும் அளிக்காததால் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் எல்லம்மாள் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில் தன் கணவர் கல்யாணசுந்தரம்  இரண்டாவது மனைவி நந்தினி பேச்சை கேட்டுக் கொண்டு நான்கு மாதங்களாக தன்னிடம் பேசுவதில்லை. தன்னுடைய மொபைல் நம்பரை பிளாக் செய்துள்ளார். பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் எனவே தான் என்று அவருடைய வீட்டிற்கு வந்து முறையிட்டேன் என்று கூறிய எல்லம்மாள் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்னை ஒன்றும் செய்ய முடியாது தனது கணவர் கல்யாணசுந்தரம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தனக்கு நீதி கிடைக்க வேண்டும், தன் கணவர் தன்னுடன் வாழ வேண்டும், என கோரி உள்ளார். இது குறித்து எல்லம்மாள் கூறுகையில், புதுச்சேரியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கல்யாணசுந்தரமும் நானும் நான்கு ஆண்டுகளாக காதலித்து கடந்த 17.3.2008-ல் சென்னை வடபழனி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். 

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தபோது தாய் வீட்டில் இருந்தபோது கல்யாணசுந்தரம் எனக்கு தெரியாமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பிறகு தான் அவ்விஷயம் தெரிந்தது. பிறகு தவறு செய்து விட்டதாகத் தெரிவித்தார். பிறகு இணைந்து வாழ்ந்து வந்தோம். தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது மனைவியின் பேச்சைக்கேட்டு எனது வீட்டுக்கு வருவதில்லை. எனது குழந்தைகளையும் சரியாக கவனிப்பதில்லை என்று கூறிய எல்லம்மாள்

எனது கணவர் என்னை சமாதானப்படுத்தி மாதம் உனக்கு குடும்பச் செலவிற்கு பணம் தருவதாகவும் தெரிவித்து அவ்வப்போது எனது வீட்டிற்கு வந்து சென்றார். ஆனால் இப்பொழுது சில மாதங்களாக எனக்கும், குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் உதவித்தொகையை எனது கணவர் நிறுத்தி விட்டார். தற்போது முழுவதுமாக எனது குழந்தைகளுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார் எனவே அவர் மீது என்னையும் எனது கணவரையும் சேர்த்து வைக்கக் கோரி காவல்நிலத்தில் புகார் அளித்து இருப்பதாகவும் இரண்டாவது மனைவி தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்தார். 

click me!