நீட் தேர்வை போல, இனி +2 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்பார்களா? என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தமிழகத்தில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே இந்த முறை அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் 93.76% பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 94.03% ஆக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
எனினும் இதில் 47,934 பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஒரு சிலர் ஒரு பாடங்கள், ஒரு சிலர் 2 அல்லது 3 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மலப்புரம் சோகம்.. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ ஹெலிகாப்டரை அனுப்பியது இந்திய கடற்படை..
இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி, கோவர்த்தன்கிரி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் தேவா (16) 12-ம் வகுப்பு தேர்ச்சி எழுதிவிட்டு இன்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேவா 2 பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேவா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை கைப்பற்றிய ஆவடி காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ஆழ்ந்த அனுதாபங்கள். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. தற்கொலைகள் நடைபெறுவதால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சொல்வோர், இனி +2 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்பார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. தற்கொலைகள் நடைபெறுவதால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சொல்வோர், இனி +2 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்பார்களா? https://t.co/TNgPe3gWgU
— Narayanan Thirupathy (@narayanantbjp)இதையும் படிங்க : 12-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலான மாணவர்களே கவலை வேண்டாம்.. துணை தேர்வு தேதி அறிவிப்பு..