மக்களை ஏமாத்திட்டாங்க.. திராவிட மாடலின் வேதனை - 2 ஆண்டு திமுக ஆட்சியை பங்கம் செய்த ஓபிஎஸ்

Published : May 08, 2023, 03:02 PM IST
மக்களை ஏமாத்திட்டாங்க.. திராவிட மாடலின் வேதனை - 2 ஆண்டு திமுக ஆட்சியை பங்கம் செய்த ஓபிஎஸ்

சுருக்கம்

திமுகவின் 2 ஆண்டுக் கால ஆட்சியில் மக்களுக்கு வேதனைதான் அதிகம் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி நிறைவடைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் 3ம் ஆண்டை நோக்கி எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் என்ற போா்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்காதவை.

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு ரூ. 6, 000 வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தி ரூ. 18, 000 வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. நகைக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், விண்ணப்பித்தவா்களின் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நீட் தோவு ரத்து செய்யப்படவில்லை. அதனால், திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வேதனைதான் அதிகம் என்று திமுகவின் 2 ஆண்டுகால ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இதையும் படிங்க..இந்த நம்பர்ல இருந்து போன் வந்தா.? வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!