Parliament: 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்.. பதுக்கலே காரணமா? மத்திய அரசு கொடுத்த ஷாக் தகவல்..!

Published : Dec 08, 2021, 12:19 PM ISTUpdated : Dec 08, 2021, 01:02 PM IST
Parliament: 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்.. பதுக்கலே காரணமா? மத்திய அரசு கொடுத்த ஷாக் தகவல்..!

சுருக்கம்

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி  2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 336.3 கோடியாக இருந்தது. இது ஒட்டு மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகவும், மதிப்பில் 37.26 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 336.3 கோடி எண்ணிக்கையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டு தற்போது, 223.3 கோடி மட்டும் புழக்தில் இருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்பின்னர் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க;- AIADMK:மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல.. எகத்தாளம் செய்யும் எலிகளே..சசியை மறைமுக தாக்கும் விந்தியா

நாடாளுமன்ற  மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி  2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 336.3 கோடியாக இருந்தது. இது ஒட்டு மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகவும், மதிப்பில் 37.26 சதவீதமாகவும் இருந்தது.

இதையும் படிங்க;- பிறப்புறுப்பில் வீக்கம்.. நடந்துகூட செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் ஸ்டேசனில் நடந்தது என்ன? ஓங்கி அடிக்கும் OPS

ஆனால், கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி ரூ.2000  நோட்டுகளின்  எண்ணிக்கை 223.3 கோடியாக உள்ளது. அதாவது தற்போதுள்ள ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 1.75 சதவீதமாகவும் மதிப்பில் 15.11 சதவீதமாகவும் உள்ளது. மக்களின் பரிமாற்ற  தேவையை பொறுத்து ரிசர்வ்  வங்கியுடன்  ஆலோசனை நடத்தி குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை  அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்கிறது. 

இந்த 2,000 ரூபாய் நோட்டுகள், 2018 - 2019க்கு பின் புதிதாக அச்சடிக்கப்படவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. மேலும்,  அழுக்கடைந்ததாலும், கிழிந்தது போன்ற காரணங்களால் 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!