பிரதமர் மோடியை திடீரென சந்தித்த மம்தா.. டெல்லியில் பரபரப்பு !

By Raghupati RFirst Published Aug 5, 2022, 6:40 PM IST
Highlights

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு நீண்ட காலமாக கோரி வரும் ஜிஎஸ்டி வரிக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பு நடக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.  அமலாக்கத் துறையால் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு..கடுப்பான நீதிமன்றம்.. ஓபிஎஸ் தரப்பை அலறவிட்ட நீதிபதி - ஒருவழியாக மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு !

இந்நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி மேற்குவங்க அமைச்சர்கள் புதிதாக சிலர் பதவியேற்று கொண்டனர் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.  மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். இன்று அவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் மோடியுடனான மம்தாவின் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு எதற்கு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போதுதான் தெரியும்.

மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !

click me!