மோடிக்கு எமன் இதுதான்.. பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பூர்வ குடிமக்களே கிடையாது.. அழகிரி பகீர்.

Published : Aug 05, 2022, 04:19 PM IST
மோடிக்கு எமன் இதுதான்.. பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பூர்வ குடிமக்களே கிடையாது.. அழகிரி பகீர்.

சுருக்கம்

மோடிக்கு எமன் என்று சொன்னால் அது ஜிஎஸ்டி தான் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் பாஜக நிர்வாகிகள் இந்தியாவின் பூர்வகுடிகளே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  

மோடிக்கு எமன் என்று சொன்னால் அது ஜிஎஸ்டி தான் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் பாஜக நிர்வாகிகள் இந்தியாவின் பூர்வகுடிகளே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர், 

தற்போது சோனியா காந்தி ராகுல் காந்தி மீது நடத்தப்படும் தாக்குதல் அவர்கள் மீதான தாக்குதல் அல்லது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றார்.அவர்களே பொய்யான சான்றிதழ்களை காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் மோடிக்கு எமன் என்று சொன்னால் அது ஜிஎஸ்டி தான் என்ற அவர், 5ஜி ஏலத்தில் குறைவான தொகைதான் கிடைத்திருக்கிறது என்றால், ஏன் அந்த ஏலத்தை ரத்து செய்ய கூடாது என கேள்வி எழுப்பினார். ஆனால் அதை செய்ய முயற்சிக்காமல் 2ஜி விவகாரத்தை இதனுடன் முடிச்சுப் போடுகிறார்கள், தற்போதைய 5ஜி ஏலத்தை ரத்து செய்துவிட்டு மூன்று மாதத்திற்குள் புதிய ஏலத்தை நடத்தினால் இதை விட அதிக தொகை கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார், அதனால்தான் பாஜகவால் தமிழகத்தில்  கால் ஊன்ற முடியவில்லை என்றார். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கும் வித்தியாசம் உள்ளது, இந்துமதம் என்பது எங்களுக்கு சொந்தமான மதம் அதில் நீங்கள் வந்து புகுந்தவர்கள், பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பூர்வ குடிமக்களே கிடையாது என்றார். இவ்வாறு அழகிரி பேசினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!