
தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன ?
என்று டிசம்பர் 26,2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நேற்று, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது.
இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே ? இது ஊழல் அரசு என்பதையும்,உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே ? சொன்னது நீ தானா சொல் சொல் சொல்… என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி