தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையால் அவரது வலது கால் நீக்கப்பட்டது. அப்போதும் கால் அகற்றப்பட்ட பகுதியில் வலி ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை… நஷ்ட ஈடு வழங்க வேண்டும்… கரு.நாகராஜன் வலியுறுத்தல்!!
இந்த நிலையில் உயிரிழந்த பிரியாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவர் தனது முகநூல் பக்கத்தில், சென்னை, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையினால் இராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் கால்பந்து வீராங்கணை செல்வி ஆர்.பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இதையும் படிங்க: மாதம் 2 லட்சம் வரை சம்பளம்..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
இந்த மரணத்திற்கு காரணமான திமுக அரசினை வன்மையாக கண்டிப்பதோடு, ரூ.10 இலட்சம் என அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டினை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். செல்வி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.