குற்றவாளிகளை கொண்டாட கூடாது.. எழுவர் விடுதலை குறித்து பாஜகவை சீண்டிய எம்.பி ஜோதிமணி

By Raghupati R  |  First Published Nov 15, 2022, 8:47 PM IST

குற்றவாளிகளை கொண்டாட கூடாது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பதிவிட்டுள்ளார் கரூர் எம்.பி ஜோதிமணி.


1991-ம் ஆண்டு, மே மாதம் 21-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல்  நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இந்த வழக்கில்  நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்தனர். பிறகு தற்போது 7 பெரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு விதங்களில் ஆதரவு குரல்களும்,எதிர்ப்பு குரல்களும் வருகிறது.

இதையும் படிங்க..நாட்டையே அதிர வைத்த பயங்கர கொலை வழக்குகள்..!

இந்த நிலையில் கரூர் எம்பி ஜோதிமணி இதுகுறித்து கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ‘காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு, இன்று ராஜீவ் காந்தி கொலையாளியைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு என காங்கிரஸ் எம்.பி ஜோதி மணி கேள்வி எழுப்பியுள்ளார். கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம். ஆனால் குற்றாவாளிகளை கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி

click me!