கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம்..! சமூக நல்லிணக்க பேரணி.! அனுமதி மறுத்த போலீஸ்..! ஆவேசமான கிருஷ்ணசாமி

By Ajmal KhanFirst Published Nov 15, 2022, 2:59 PM IST
Highlights

தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகதெரிவித்தார்.
 

சமூக நல்லிணக்க பேரணி

கோவையில் சமூக நல்லிணக்க பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்க்கு கோவை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை தொடர்ந்து கோவை குனியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கிலே வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற திட்டமிட்டதாக தெரிவித்தார். இதற்காக அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்தார். எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனக் விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறினார். தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலாளரை சந்தித்து முறையிட இருப்பதாக தெரிவித்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு..! என்ன காரணம் தெரியுமா.?

தமிழக அரசு கை விட வேண்டும்

தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடு முறையை அமலாக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக தொடர் போராட்டம் மேற்கொள்வோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம். அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது. இது ஒரு ஏமாற்று வேலை என குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களும், கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்,

இதையும் படியுங்கள்

திராவிட மாடலா.? வெறுப்பு மாடாலா..? வாக்குறுதிக்கு எதிராக இரட்டை வேடம் போடும் திமுக..! ஓபிஎஸ் ஆவேசம்
 

click me!