பிரதமர் மோடி படத்தை வீசுறீங்களா ? கொந்தளித்த கோவை பாஜகவினர்..ஆட்சியர் அலுவலகத்தில் அடாவடி சம்பவம் !

By Raghupati RFirst Published Apr 25, 2022, 4:14 PM IST
Highlights

கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே இடத்தில் மீண்டும் மோடியின் படத்தை திரும்பவைக்க வேண்டும் என்றும் கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சியினர் முன்வைத்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பேருராட்சி அலுவலகத்தில் கடந்த 23ம், தேதி அன்று பிரதமர் மோடியின், படத்தை பொதுமக்கள் சார்பாக செயல் அலுவலரின் வாய்மொழி அனுமதியுடன் சுவரில் பாரதிய ஜனதா கட்சியினர் மாட்டினர். ஆனால் அந்த படத்தை அவமானபடுத்தும் விதமாக கழற்றி வீசப்பட்டு இருப்பதை கண்ட பாரதிய ஜனதா கட்சியினர், மோடியின் படத்தை திரும்பமாட்ட கோரிக்கை வைத்தனர். ஆனால் மீண்டும் படத்தை மாட்ட, அரசு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக மனு அளிக்க பாரதிய ஜனதா கட்சியின், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வந்தனர். இன்று பொதுமக்கள் மனு நாள் என்பதால் காவல்துறையினர் அனைவரையும் அனுமதிக்க முடியாது என்று  தெரவித்து அவர்களை வாசலில் நிற்க வைத்தனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரையும் சாலை ஒரமாக நிற்க சொல்லி வற்புறுத்தினர் காவல்துறையினர்.

ஆனால் இதனை ஏற்று கொள்ளாத பாஜகவினர் போலிஸ் அராஜகம் ஒலிக என்று கோஷங்களை எழுப்பினர்.  இதனை தொடர்ந்து காவல் துறையினர் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி, வாகனத்தில் ஏற்றி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : PUBG Madan : பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து.! சென்னை ஐகோர்ட் உத்தரவு !!

click me!