ஆளுநர் தனது கடமையை செய்ய வேண்டும். அரசியல் பேசக் கூடாது என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
புதுச்சேரியில் இன்று திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, , “எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு தமிழகம் திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலினை அண்ணாமலை தடுத்து நிறுத்தினால் ஆட்டுகுட்டி அண்ணாமலையை எங்களது கட்சி தொண்டர்கள் பிரியாணி ஆக்கிவிடுவோம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார்.
என்னை பிரியாணி ஆக்கி சாப்பிடட்டும் எந்த தொந்தரவுமில்லை. தமிழகம், புதுச்சேரிக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்க முயற்சி செய்தால் அதையும் பாரதிய ஜனதா கட்சி விடாது. ஆளுநர் தனது கடமையை செய்ய வேண்டும். அரசியல் பேசக் கூடாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல.
பாஜக விமர்சனம் செய்வது வேறு. ஆளுநர் விமர்சனம் செய்வது வேறு. என்னைப் போல் தினமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் ஆளுநருக்கு சரியான மரபு இருக்காது. தவறான முன்னுதாரணம் ஏற்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.