பொதுசிவில் சட்டம் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி - தமிழிசை குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Jul 5, 2023, 6:31 PM IST

பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்க்கு எதிரான சட்டம் என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலியில் உள்ள அரிகேசவநல்லூர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அப்போது அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆன்மீகம் நமது நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுகிறது. 

அந்த ஆன்மீகம் பறந்து பட்ட எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக உள்ளது. தூத்துக்குடி எம்பி (கனிமொழி)யின் ஒரு கோரிக்கை ஒன்றை நான் பார்த்தேன். அதில் ஒரு மதம் சார்ந்த ஒரு திருவிழாவிற்கு அதிக பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். ஒருவேளை என் கண்ணில் அது மட்டும் தான் பட்டதா என்று தெரியவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

அமைச்சரோடு மாமன்னன் படம் பார்த்த திமுகவினர் ஓசியில் பாப்கார்ன் கேட்டு தகராறு; திரையரங்கில் அடிதடி

திருச்செந்தூரில் எல்லா வழிபாட்டு தலங்களும் உள்ளன. எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி. ஒருவேளை விடாமல் விட்டிருந்தால் என் கண்ணில் மட்டும் பட்டிருந்தால் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் இருக்கக் கூடாது. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. ஆக, இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீக நிலைமை இருக்க வேண்டும். பாரத பிரதமர் சொல்வது போல நமது ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் உள்ள எலிகள் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகிறது. காவல் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது என்ற ஒரு பெரிய பிரச்சினை தமிழகத்தில் ஓடி கொண்டுள்ளது. 

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூலம் கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள் - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரி

பொது சிவில் சட்டம்  அனைவருக்கும் சமமானது. பாரத பிரதமர் தெளிவாக சொல்கிறார். ஒரு குடும்பத்தில் ஒருத்தருக்கு ஒரு சட்டம், இன்னொருத்தருக்கு ஒரு சட்டம். ஒரு மதத்தை சார்ந்தவர்க்கு எதிரான சட்டம் என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். பொது சிவில் சட்டம் என்றால் பொதுவாக இருக்கின்ற ஒரு சட்டம். இது தவறாக முன்னிறுத்தப்படுகிறது என்றார். மேலும், விஜய் அரசியலுக்கு வருவாரா? மாமன்னன் திரைப்படம் குறித்த கேள்விக்கு ஆளுநர் தமிழிசை கையெடுத்து  கும்பிட்டு சென்றார்.

click me!