மதுரை உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்.. வருத்தம் தெரிவித்த எ.வ.வேலு!

By vinoth kumar  |  First Published Jul 5, 2023, 2:34 PM IST

தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருட்செலவு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவை இருந்தது. அதனால், மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர் நீதிமன்றக் கிளையைக் கொண்டு வந்தது.


உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என பேசியதற்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்தார். 

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. இதில், அமைச்சர் , அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ தளபதி, மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு;- முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி, எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தவர்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- வாக்களித்த பொதுமக்களை கொச்சைப்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக போச்சு! வேலுவுக்கு எதிராக சீறும் அண்ணாமலை.!

ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மிகத்துக்கு எதிரானவர்களாகக் காண்பிக்க எதிர்க்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால், அது நடக்காது. தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருட்செலவு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவை இருந்தது. அதனால், மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர் நீதிமன்றக் கிளையைக் கொண்டு வந்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்த பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  தாழ்த்தப்பட்டோர் குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.! இறங்கி அடிக்கும் இபிஎஸ்..!

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் தான் தெரியவந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

click me!