மதனுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பெண் எம்.பி.. அண்ணாமலையை டார் டாராக கிழித்து அதகளம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2021, 11:44 AM IST
Highlights

இன்றும் ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பதே கூட எளிதாக இல்லை. அப்படி நினைத்தாலும் குடும்பம் சமூகம் என்று பல தடைகளைக் கடந்து அரசியலில் பெண்கள் கால்பதிக்க வேண்டியுள்ளது. தனி ஒரு பெண்ணின் அரசியல் செயல்பாடு என்பது அதன் அளவில் ஒரு இயக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது

பாரதிய ஜனதா கட்சியில் பாலியல் குற்றவாளியான கே.டி ராகவனை கட்சியில் இருந்து நீக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கி இருப்பது வெட்கக்கேடானது கடும் கண்டனத்திற்குரியது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

இன்றும் ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பதே கூட எளிதாக இல்லை அப்படி நினைத்தாலும் குடும்பம் சமூகம் என்று பல தடைகளைக் கடந்து அரசியலில் பெண்கள் கால்பதிக்க வேண்டியுள்ளது தனி ஒரு பெண்ணின் அரசியல் செயல்பாடு என்பது  அதன் அளவில் ஒரு இயக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது இப்படி பல கடுமையான சோதனைகளை தாண்டி அரசியலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் தலையாய கடமை ஒருவேளை கயவர்களால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அச்சமற்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டியதும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பு அப்போதுதான் அரசியலில் பெண்கள் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் ஈடுபடமுடியும். 

 

பாரதிய ஜனதா கட்சி உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கே டி ராகவன் செய்த பாலியல் குற்றம் வெளிச்சத்திற்கு வந்ததும் உடனடியாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் குற்றத்தை வெளிக்கொண்டு வருவதற்கும் பாதுகாப்பாகவும் பக்கபலமாக நின்று முறையாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேர் எதிராக பாரதீய ஜனதா கட்சியை பாலியல் குற்றவாளி என கேட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணையும் இந்த பாலியல் குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வரையும் கட்சியிலிருந்து நீக்கி இருப்பது வெட்கக் கேடானது கடுமையான கண்டனத்துக்குரியது.

ஆனால் பாஜகவிடம் இருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் இன்னும் பாஜகவின் பல முக்கிய தலைவர்களின் 15 பாலியல் வீடியோக்கள் வெளிவரும் என்று சொல்லப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் நீக்கப்பட்டு இருப்பது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அந்த வெளிவராத வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே விசாரணைக்கு முன்பாக அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட பெண்ணையும் பாலியல் வீடியோ வெளியிட்ட அவரையும் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது என அவர் கூறியுள்ளார். 
 

click me!