அடக்கமுடியாத கோபமும் ஆத்திரமும் வருது..! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!

Published : Mar 18, 2020, 12:54 PM IST
அடக்கமுடியாத கோபமும் ஆத்திரமும் வருது..! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!

சுருக்கம்

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க எந்த திட்டமுமில்லை என்று அறிவித்து, மத்திய அரசு கையை விரித்திருப்பது அடக்கமுடியாத கோபத்தையும், பெரும் ஆத்திரத்தையும் தருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. பலி எண்ணிக்கை இன்று 8 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. அதிகபட்சமாக சீனாவில் 3,237 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 2,503 பேரும், ஈரானில் 988 பேரும் பலியாகி இருக்கின்றனர். ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தார். எனினும் தற்போது வரை அவர்கள் தாயகம் அழைத்து வரப்படவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க எந்த திட்டமுமில்லை என்று அறிவித்து, மத்திய அரசு கையை விரித்திருப்பது அடக்கமுடியாத கோபத்தையும், பெரும் ஆத்திரத்தையும் தருகிறது.

முழு அடைப்பு தான் ஒரே வழி..! அதிரடி கிளப்பும் மருத்துவர் அன்புமணி..!

 

இதைப்போலவே, பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்து வரும் மருத்துவ மாணவர்களும் நாடு திரும்ப முடியாமல் தவித்து நிற்கிறார்கள். அவர்களை மீட்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நெருக்கடியான நேரத்திலும்கூட தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கும் மத்திய அரசின் அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது, என சீமான் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு