மத்திய அரசு அறிவித்ததுபோல நீங்களும் அறிவியுங்க..!! எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர்கள்...!!

Published : Mar 18, 2020, 12:14 PM IST
மத்திய அரசு அறிவித்ததுபோல நீங்களும் அறிவியுங்க..!!  எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர்கள்...!!

சுருக்கம்

அகவிலைப்படி என்பது ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம்  அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதைப்போல மாநில அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி வழங்கிட தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . இது குறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-  மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசின் கீழ் ப்பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது. 

மேலும் அகவிலைப்படி என்பது ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம்  அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதியத்தாரர்கள், குடும்ப ஓய்வூதியத்தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் மொத்தம் ஒன்றரை கோடி பேர் பயன்பெறுவார்கள். ஆகையால்,  ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அரசின் நலத்திட்டங்களை கடைகோடி குடிமகனுக்கும் எடுத்துச்செல்லும் பணியினை சிறப்பானமுறையில்  செய்துவருவது அனைவரும் அறிந்ததே. 

எனவே மத்திய அரசு அறிவித்துள்ள 4% அகவிலைப் படியினை மாநில ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கிட ஆவனசெய்யும்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!