ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் ஆளுநர் பதவியும் என்பது எங்களது கொள்கை. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான்.
குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியது இதில் தி.மு.க.வின் செயல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஆரஞ்சை தொடர்ந்து நீலம், பச்சை பால் பாக்கெட் விலையை உயர்த்த திமுக திட்டம்.. அதிர்ச்சி தகவல் கூறும் டிடிவி..!
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் ஆளுநர் பதவியும் என்பது எங்களது கொள்கை. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பேரணி நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்றுள்ளது. வழக்கமாக எப்போதும் இந்த பேரணி நடைபெறும். அதனால் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிங்க;- ஏதோ அரசியல்வாதி தயாரித்தது போல் இருக்கும் ஆறுமுகசாமி அறிக்கை.. நீதிமன்றத்துக்கு நிச்சயம் செல்வார்கள்.. டிடிவி
மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர். தி.மு.க. என்னும் தீய சக்தியை வீழ்த்த கூட்டணியால் தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசம்கரம் நீட்ட நான் தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் கூட்டணிக்கு வர வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை நாங்கள் மட்டுமே உத்தமர்கள் என்று சொல்லும் திமுகவுக்கு இது அசிங்கமா இல்லையா.. டிடிவி