கண்டா வர சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்க.. கரூர் எம்.பி. ஜோதிமணி குறித்து வைரலாகும் போஸ்டர்..!

By vinoth kumarFirst Published Nov 7, 2022, 9:13 AM IST
Highlights

கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. இவர் மிக இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தார். இந்திய இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக திகழ்ந்தார். 

கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை காணவில்லை என்ற போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. இவர் மிக இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தார். இந்திய இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக திகழ்ந்தார். எளிமையான தோற்றத்தை தனது அடையாளமாக கொண்ட அவர் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பவர்.  இந்திய இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றி, ராகுல் காந்திக்கு நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்து வருகிறார். 

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், மாவட்ட ஆட்சியருடன் மோதல் ஏற்பட்ட போது  இவரை பற்றி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  இதனால், காங்கிரஸ் கட்சியினரே அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற கேன்டீனில் சலுகை விலை பஜ்ஜி போண்டா சாப்பிட்டதை தவிர இவரால் கரூர் தொகுதிக்கு எந்த பயனும் இல்லை என ஜோதிமணி குறித்த போஸ்டர் வைரலாகி வருகிறது. 

எம்.பி. ஜோதிமணியை காணவில்லை என்று கரூர் முழுவதும் சுவரொட்டிகள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த போஸ்டரில் பயோடேட்டா மாடலில், 

பெயர்: ஜோதிமணி

வயது:  47

பிடித்த இடம்: போலீஸ் வேன், நாடாளுமன்ற கேண்டீன்

 வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது எப்படி

பிடித்த பொழுதுபோக்கு: கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளாண் பிரியாணி சமைப்பது. 

பிடித்த வார்த்தைகள்: அண்டோனியா மைனோ, ராவுல் வின்சி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா

பிடிக்காத வார்த்தைகள்: தொகுதி நலன், மக்கள், வாக்குறுதி, ராமர்கோவில்

பிடித்த நாடு: இத்தாலி

மறந்தது: தான் கரூர் தொகுதி எம்.பி. என்பதை

காணாமல் போன தினம்: 23 மே 2019 (கரூர் எம்.பி.யாக பதவியேற்ற பின்பு) 

நாடாளுமன்ற கேண்டீனில் சலுகை விலை பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதை தவிர, இவரால் தொகுதிக்கு எந்தவித பயனும் இல்லை. 

கண்டா வர சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்க என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

click me!