செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. எரிச்சலான செல்லூர் ராஜூ.. அப்படி என்ன கேட்டாங்க தெரியுமா?

By vinoth kumarFirst Published Sep 3, 2022, 7:34 AM IST
Highlights

அதிமுக வெற்றிச் சரித்திரத்தல் மற்றுமொறு மகுடமாக சிறப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கி உள்ளது. கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மாவிடம் அரசியல் கற்றவர் கட்சித் தொண்டகளை அரவணைப்பில், கட்சியை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.

கேரளா செல்லும் தமிழக முதல்வர் விளம்பரத்திற்கு செல்லாமல் 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கு, முல்லைப் பெரியாறு ஆக்கப் பூர்வமாக தீர்வு காண வேண்டுமென மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் செல்லும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்தித்து இனிப்பு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;- அதிமுக வெற்றிச் சரித்திரத்தல் மற்றுமொறு மகுடமாக சிறப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கி உள்ளது. கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மாவிடம் அரசியல் கற்றவர் கட்சித் தொண்டகளை அரவணைப்பில், கட்சியை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார். இந்த வெற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த  வெற்றியாக தெரிகிறது.

இதையும் படிங்க;- நீதிமன்றம் தீர்ப்பு இறுதியானது இல்லை.. டுவிஸ்ட் வைத்து புதிய தகவலை கூறிய கோவை செல்வராஜ்..!

கேரளா செல்லும் தமிழக முதல்வர் விளம்பரத்திற்கு செல்லாமல் 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கு, முல்லைப் பெரியாறு ஆக்கப் பூர்வமாக தீர்வு காண வேண்டுமென மக்கள் சார்பாக  கேட்டுக்கொள்கிறேன். திமுகவிற்கு ஓர் ராசி உண்டு ஆட்சிக்கு வந்தால் அணைப் பிரச்னை வரும், அதில் கவனம் செலுத்துவது கிடையாது என்ற கருத்தை முதல்வர் மாற்றிக் காட்ட வேண்டும்.  முதல்வரின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க நடவடிக்கைகள் செய்து அதை 5  மாவட்ட மக்களுக்கு ஓணம் பரிசாக   தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இடைக்காலப் பொதுச் செயலாளர்  சிறந்த மாணவர் அவருக்கு கட்சியை எப்படி வழிநடத்த வேண்டுமென ஜெயலலிதாவிடம் பாடம் கற்றவர். எங்களின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். தொடந்து அதிமுக குறித்த கேள்விகளால் சற்று எரிச்சல் அடைந்த செல்லூர் ராஜூ எப்போதும் அரச்ச மாவையே அரைக்காதீர்கள்!! அது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை மக்கள் பிரச்னையை பேசுவோம்ப்பா.. என்றார்.

இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு.. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்க தீர்ப்பு வெளியானது..!

திமுக நகைக்கடன் தள்ளுபடி செய்வேன் என சொன்னார்கள் செய்யவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகையும் வழங்கவில்லை பலத்திட்டங்களை  திமுக செயல்படுத்தவில்லை. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பணியாற்றிவிட்டு அரசு அதிகாரிகளுக்கு வேலை செய்வது  மறந்துவிட்டார்கள் பயிற்சி கொடுக்க வேண்டுமென்ற நீர்வளத்துறை துரைமுருகன் கருத்திற்கு இந்த ஆண்டின் சிறந்த ஜோக் அமைச்சர் துரைமுருகன் சொல்வதுதான். அவர்  சட்டமன்றத்தில் மூத்தவர் எப்போது நகைச்சுவையாக  பேசக் கூடியவர் அப்படித்தான் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். கட்சியை காப்பாற்ற  வழிநடத்த நல்ல கேப்டன் வேண்டும், அப்படி  இருந்தால்தான் கட்சியை கொண்டு செல்ல முடியும் அப்படிப்பட்டவரை கேட்பனாக்கி உள்ளோம். இனி வரும் காலங்களில் அதிமுக கட்சித் தொண்டரின்  சட்டைப் பையில் எம்.ஜி.ஆர் படம், ஜெயலலிதா படம், எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும் என்றார்.

click me!