சமமில்லை என்பது சனாதனப் புத்தியின் எச்சம்… அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!!

Published : Sep 02, 2022, 11:52 PM ISTUpdated : Sep 02, 2022, 11:53 PM IST
சமமில்லை என்பது சனாதனப் புத்தியின் எச்சம்… அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!!

சுருக்கம்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வீரமரணமடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் முதல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் டிவிட்டரில் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை... அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!!

அந்த வகையில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்த பிடிஆர், அண்ணாமலையை ஆடு என்று குறிப்பிட்டார். மேலும் நான் ஆட்டை பெயர் சொல்லி அழைப்பது இல்லை? என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அதுமட்டுமின்றி இறந்து போன ராணுவ வீரரின் உடலை வைத்து அவர் பப்ளிசிட்டி தேடுகிறார், தேசிய கொடி போர்த்திய காரில் அவர் செருப்பை தூக்கி வீச பிளான் போட்டு கொடுத்தார், மோசமான பொய் சொல்கிறார், சலசலப்புகளை செய்து வருகிறார் என்றும் இவரை போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த சாபம். பாஜகவிற்கும் அவர் சாபம்தான் என்றும் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலையும், நீங்களும், உங்கள் கூட்டமும் உங்கள் முன்னோர்களின் இன்ஷியலை வைத்து வாழ்க்கை நடத்தும் கும்பல். உங்களால் என்னை போல சுயமாக உருவாக்கப்பட்ட, விவசாயியின் மகனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் படிங்க: "தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு" மாஸாக களமிறங்கிய சீமான்.. திருப்போரூர் முருகன் கோவிலில் நாளை அதிரடி.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உறுப்படியாக ஏதாவது செய்து இருக்கிறீர்களா? நீங்கள்தான் தமிழ்நாட்டின், அரசியலின் சாபம், உங்களை போல நாங்கள் பெரிய பெரிய விமானங்களில் பறக்க மாட்டோம். நீங்கள் என் செருப்பிற்கு கூட தகுதியானவர் கிடையாது என்று தெரிவித்திருந்தார். இவ்வாறாக இருவரும் மாறி மாறி வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன், சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக் குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்! தானென்ற ஆணவத்தின் உச்சம் முதிர்ச்சியின்மையின் முற்றம். சகிப்பின்மையின் குற்றம். அச்சத்தின் பாய்ச்சல்! அறியாமையின் கூச்சல்! என்று விமர்சித்து உள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!