"தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு" மாஸாக களமிறங்கிய சீமான்.. திருப்போரூர் முருகன் கோவிலில் நாளை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2022, 8:51 PM IST
Highlights

திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 
 

திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற சில வாரங்களில் அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவு இருந்தாலும் ஆகம விதிப்படிதான் அவர்களை நியமிக்கப்பட வேண்டும் என இது தொடர்பாக வழக்கில் சென்னை உயிர்நீதிமன்றம் சிக்கலான தீர்ப்பு கொடுத்துள்ளது. 

இந்நிலையில்தான்  அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி களமிறங்கியுள்ளது. இதன் தொடங்கமாக திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-  

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாட்டு” என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கவிருக்கிறது. 

அதனை முன்னிட்டு,  1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான  (செப்டம்பர் 3 ) நாளை  காலை 10 மணிக்கு *திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள். 

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள  அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப்  பாசறைகளின்  பொறுப்பாளர்கள் இணைந்து இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி வழிபடவும், கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும்  தமிழ் வழிபாட்டைச் செய்யுமாறு வலியுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். "தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு" இது கோரிக்கையல்ல, நமது உரிமை!

 

click me!