அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !

By Raghupati RFirst Published Sep 2, 2022, 3:53 PM IST
Highlights

ஒரு வார்த்தை ட்வீட் தான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் டாபிக். 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்று ட்விட்டரில் 'ஜனநாயகம்' இதனை ஆங்கிலத்தில் ‘democracy’ என்று பதிவிட்டார். உடனே நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ‘universe’ என்று பதிவிட ட்விட்டரில் ஒரு வார்த்தை ட்வீட் வைரலானது. உலகின் பெரிய தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த ஒரு வார்த்தை ட்வீட் போட்டு ட்விட்டரில் பட்டயை கிளப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

நம் இந்தியாவை சேர்ந்தவரும், கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் தொடக்கி வைத்தார். அவர் ‘cricket’ என்று பதிவிட, இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வார்த்தை ட்வீட்டை மேலும் பிரபலப்படுத்த தொடங்கினர்.  இந்த ட்ரெண்டிங்கில் நாங்க மட்டும் சும்மா இருக்கிறதா என்று அதிமுகவினரும் ஒரு வார்த்தை ட்வீட் போட்டு, வைரலாக்கி வருகின்றனர். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.  அத்துடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே  தொடர வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.  இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதத்தையும் கேட்ட  நீதிபதிகள்  கடந்த 25ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில்  இந்த வழக்கு இன்று காலை  நீதிபதிகள்  துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு  தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தெரிவித்துள்ளது.  இதன் மூலம்  ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொது குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 

இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும், அதன்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்படியார்’ என்று பதிவிட்டுள்ளனர். இதற்கு அதிமுக தொண்டர்கள் சிலர், தர்மம் வென்றது, எடப்படியார் தான் அடுத்த அதிமுகவின் முகம் என்றும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, அடுத்து எடப்படியார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

click me!