அதிமுக- பாஜக கூட்டணி முறிவு..! நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் தேமுதிக..? பிரேமலதா விஜயகாந்த அதிரடி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியில் தேமுதிக இருக்கும் என, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


தமிழக கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் இருந்து பெற, அனைத்து கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.  

Latest Videos

நடிகர் சித்தார்த் பங்கேற்ற நிகழ்வை தடுத்து உணர்வை வெளிப்படுத்தி காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுப்பதில் கர்நாடகத்துக்கு உள்ள ஒற்றுமை, நீரை கேட்டுப் பெறுவதில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே இல்லை என்று அவர் கூறினார். 

பிரதமரை சந்திக்க வேண்டும்

காவிரி நீர் வேண்டி ஏற்கனவே தஞ்சையில் தேமுதிக போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டிய பிரேமலதா, விவசாயிகள் நலனுக்காக தேமுதிக தவிர யாரும் பேசுவதில்லை என்றார். காவிரி விவகாரத்துக்காக அனைத்து கட்சிகள் மற்றும் சங்கங்களை அழைத்துக் கொண்டு, பிரதமரை சந்திப்பதோடு,சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மற்ற கட்சிகளை அழைக்க தேமுதிக தயாராக இருக்கிறது என்றும் இதற்கு முன் தேமுதிக தலைவர் அதனை விஜயகாந்த் செய்து இருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டார். அதேபோல் எதிர்க் கட்சி தலைவர் கூட நடவடிக்கை எடுக்கலாம் என பிரேமலதா கூறினார்.

தேமுதிக யாருடன் கூட்டணி

இதனையடுத்து தேமுதிகவின் தேர்தல் பணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த பணிகளையும் தேமுதிக தொடங்கவில்லை என்றும் இன்னும் 6 மாதம் காலம் அவகாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி முறிவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக -பாஜக கூட்டணி பிளவு என்பது அவர்கள் முடிவு,  இதில் தேமுதிக கருத்து சொல்ல முடியாது என்றார்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவ்வரை தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி வைக்கும் என அவர் கூறினார். காங்கிரஸ் - பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. என்று தேமுதிக பொருளாளர் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆப்பிளை நருக்கி கொடுத்து 40 சவரன் நகை கொள்ளை; மைத்திலிக்கு போலீஸ் வலை?

click me!