ஸ்டாலினை புகழ்வதைவிட உதயநிதியை புகழ்வது ஆபாசம்.. திமுகவை கிழித்து தொங்கவிட்ட சவுக்கு சங்கர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 1:33 PM IST
Highlights

கட்சியில் உதயநிதியின் வளர்ச்சி என்பதே இயற்கையானதாக இருக்க வேண்டும், ஸ்டாலின் மீது ஏன் யாரும் வாரிசு அரசியல் என்ற முத்திரை குத்த தயங்குகின்றனர் என்றால், கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் அவர் கட்சிக்காக உழைத்து, அதன் மூலம் படிப்படியாக வளர்ந்திருக்கிறார். 

ஒவ்வொரு அமைச்சர்களும் ஸ்டாலினை விட உதயநிதியை வானளவு புகழ்கின்றனர், அதை முதலமைச்சரும், அவரின் தந்தையுமான ஸ்டாலின் விரும்புகிறார், ஒரு கட்டத்தில் இது ஸ்டாலினுக்கே ஆபத்தாக முடியும் என்றும், உதயநிதியை புகழ்வது ஸ்டாலினை புகழ்வதை காட்டிலும் ஆபாசமானது என சவுக்கு சங்கர் வசித்துள்ளார். பாராளுமன்றத்தில் பதவியேற்கும் போது திமுக எம்.பி உதயநிதி வெல்க என  கூறுவது திமுக கொத்தடிமை இயக்கமாக  மாறிவிட்டது என்பதையும், அதன் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்பதையுமே காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல துறைகளில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. ஆனால் அந்த அளவிற்கு தற்போது பெய்து வரும் கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில்  அரசின் நடவடிக்கைகள் தீவிரமாக இல்லை என்றும் விமர்சனங்கள் இருந்து வருகிறது. ஸ்டாலின் முதலமைச்சராக அரியணை ஏறி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அவர் முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அப்படி நிறைவேற்றப்படாத இதற்கு நிதி நெருக்கடியே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்துக் கோயில்களை குறிவைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், திமுக ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் உள்ளது என்றும் எதிர்க்கட்சியான பாஜக, அதிமுக கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்பிக்கள் மூவர் பதவி ஏற்றுக் கொண்டனர். அப்போது திமுக எம்.பி ராஜேஷ்குமார் பதவியேற்பு உறுதிமொழிக்கு பிறகு, வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி அவர்கள் என்று முழங்கினார். அப்போது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், நீங்கள் எழுப்பும் கோஷங்கள் எல்லாம் அவை குறிப்பில் இடம் பெறாது, வெளியில் சென்று என்ன வேண்டுமானாலும் கோஷமிடுங்கள் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார். பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் போது முழக்கங்களை எழுப்பக்கூடாது இது சட்டத்திற்கு மாறானது என வெங்கைய நாயுடு கூறினார். அவரின் இந்த அட்வைஸ் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் ஒருவர், அரசியலுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளேயான, ஒரு சட்டமன்ற உறுப்பினரான உதயநிதியின் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியம்தானா? என்று பலரும் திமுக எம்பியை விமர்சித்து வருகின்றனர். ஒருசிலர்  சுயமரியாதை பேசி வளர்ந்த இயக்கம் இப்போது சுய மரியாதை இல்லாமல் போய்விட்டது. நாடாளுமன்றத்தில் அண்ணன் உதயநிதி வெல்க என்று சொல்வதற்கு என்ன அவசியம் என்ன வந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் சேப்பாக்கம் சேகுவேரா மண்டை உடைந்தது என  திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை கலாய்க்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திமுகவின் நடந்து வரும் அரசியல் சூழல், உதயநிதிக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் குறித்து அரசியல் விமர்சகர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், மாநிலங்களவை வரை சென்று உதயநிதியை புகழ்ந்து பாடுவது திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்பதை காட்டுகிறது. சுயமரியாதை இயக்கமாக தன்னை வளர்த்துக் கொண்ட திமுகவில் உதயநிதியை புகழ்ந்து பாடுவதும், மாநிலங்களவையில் உதயநிதி வெல்க என்று ஒரு எம்பி முழக்கமிடுவதையும் பார்க்கும்போது திமுகவின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டதையே காட்டுகிறது. அப்போதே அந்த எம்பியை வெங்காய நாயுடு அவர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது திமுகவுக்கு தேவையற்ற தலைகுனிவு. எம்பி பதவி பெற்றுள்ள ராஜேஷ்குமார் யார் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் அவருக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பதவியின் ஆயுள் காலம் ஒரு வருடம் தான். அதை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு கூட கொடுத்திருக்கலாம். ஆனால் முகம் தெரியாத ராஜேஷ்குமாருக்கு அந்த பதிவி கிடைத்தது எப்படி? இது ஒருபுறம் இருந்தாலும். 

கட்சியில் உதயநிதியின் வளர்ச்சி என்பதே இயற்கையானதாக இருக்க வேண்டும், ஸ்டாலின் மீது ஏன் யாரும் வாரிசு அரசியல் என்ற முத்திரை குத்த தயங்குகின்றனர் என்றால், கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் அவர் கட்சிக்காக உழைத்து, அதன் மூலம் படிப்படியாக வளர்ந்திருக்கிறார். எனவே ஸ்டாலின் அவர்களை வாரிசு அரசியல்வாதி என்று யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் உதயநிதி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு உடனே எடுபடுகிறது, அதற்கு காரணம் ராஜ்யசபாவில் போய் ராஜேஷ்குமார் போன்ற எம்பிகள் பேசுவதினால்தான். என்னைப் பலரும் கேட்கிறார்கள், ஏன் உதயநிதியை குறிவைத்து விமர்சிக்கிறார்கள் என்று, நான் கேட்கிறேன் உதயநிதி கட்சிக்காக என்ன பங்காற்றியிருக்கிறார். திமுக என்பதையே தங்களது குடும்ப சொத்தாக ஸ்டாலின் குடும்பத்தார் கருதுகின்றனர். ராஜேஷ்குமார் போன்றவர்கள்  உதயநிதியை மாநிலங்களவையில் புகழ்வது பச்சை கொத்தடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

கட்சியில் மூத்த தலைவர்களை காட்டிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே ஏன். இரு எப்.பி மாநிலங்களவையில் உதயநிதியை புகழ்கிறார் என்றால் அந்த எம்பியை நியமித்தது ஸ்டாலினா? உதயநிதி? என்ற கேள்வி எழுகிறது. இது ஒருகட்டத்தில் ஸ்டாலினுக்கே  ஆபத்தாக முடியும். தன்னை யாரும் சட்டமன்றத்தில் புகழக் கூடாது  என கட்டுப்பாடு விதிக்கும் ஸ்டாலின், ஏன் தன் மகனை மற்றவர்கள் பாராட்டுவதை கண்டிக்க வில்லை. ஏன் என்றால் அவரே அதை விரும்புகிறார். பல மூத்த அமைச்சர்களேகூட காத்திருந்து உதயநிதிக்கு சட்டமன்றத்தில் வணக்கம் செலுத்திவிட்டு பிறகுதான் பேசுகிறார்கள். ஸ்டாலினை புகழ்வதை காட்டிலும் உதயநிதியை புகழ்வது ஆபாசம் என்றுதான் சொல்லவேண்டும். உதயநிதியை துதி பாடுவதை ஸ்டாலின் விரும்புகிறார். ஏற்கிறார் என சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

click me!