மத்தியில் குண்டூசி கூட திருடாத நேர்மையான ஆட்சி நடைபெறுகிறது - அண்ணாமலை பெருமிதம்

By Velmurugan s  |  First Published Sep 8, 2023, 12:10 PM IST

மத்தியில் குண்டூசிக் கூட திருடாத நேர்மையான ஆட்சி நடைபெற்று வருவதாக என் மண் என் மக்கள் பயணத்தின் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் ஊர்வலத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்திய ஆண்டிப்பட்டி தொகுதி மாண்புமிகு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் அவர்களை வெற்றி பெற செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய தொகுதி. இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய இந்த ஆண்டிப்பட்டி தொகுதியில் கொட்டும் மழையிலும் எனது உரையை கேட்க வந்த பொதுமக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன், கடவுளை நம்பும் நாம் அனைவரும் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒன்றுகூடி இருக்கின்றோம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் சமாதான தர்மத்தை இந்து மதத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்று கூறுகின்றார். 

அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நம்பிக்கையோடு மக்கள் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் யாருக்கான பாராளுமன்றத் தேர்தல்? 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் நேர்மையான ஒரு அரசாக ஒரு குண்டூசி கூட திருடாத மிக நேர்மையாக இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் பத்தாண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

என்கவுண்டருக்கே பயப்பட மாட்டோம்; அரிவாளுடன் வீடியோ - மாணவனை தலையில் தட்டி அனுப்பிய போலீஸ்

29 மாதங்களாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அது ஒரு குடும்பத்துக்கான ஆட்சி குறிப்பாக மகனுக்கும், மருமகனுக்கும் நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சி ஊழல் இலக்கணத்தையே தலைகீழாக மாற்றி தமிழகத்தில் இந்த அளவிற்கு எந்த ஆட்சியிலும் ஊழல் செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஊழல் ஆட்சியை தமிழக முதல்வர் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லிய நேரத்திலிருந்து தமிழக முதல்வருக்கு தூக்கம் வரவில்லை. ஆகவே வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியை ஒழித்து பாரதப் பிரதமரின் நல்லாட்சியை நடத்திட ஆண்டிபட்டி மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மகாபாரத யுத்தத்தை போல கௌரவர்கள், பாண்டவர்கள் ஆட்சி தற்பொழுது நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு குஷியாக வைப் செய்த கோவில் யானையின் கியூட் வீடியோ

முன்னதாக ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த ஊர்வலத்தை காண குவிந்திருந்த பொது மக்களை சந்தித்து பேசியதுடன் குழந்தைகளுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டும் சாலையோர கடைகளில் வியாபாரிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் தகவல்களை கேட்டறிந்தார்.

சாலையில் ஆங்காங்கே கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்தும் சால்வை அணிந்தும் வெகு விமர்சையாக அவரை வரவேற்றார்கள்.

click me!