வெட்டிப்பேச்சை விட்டுட்டு.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்துங்க.. திமுகவை பங்கம் செய்யும் கிருஷ்ணசாமி..!

By vinoth kumar  |  First Published Sep 8, 2023, 11:56 AM IST

தமிழகத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு  ஆளாகி வன்முறையில்  ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மதுவால் திருப்பூர் பல்லடத்தில் 4 வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ் நாடே போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுமோ என அச்சம் நிலவுகிறது. 


திமுக அரசு எல்லாவற்றிலும் தோல்வி கண்டு வருகிறது. அதனை மறைத்து மடைமாற்ற சனாதானம் என்ற பூதாகரத்தினை கையில் எடுத்துள்ளனர் என கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவில்பட்டியில் உள்ள பயணியர் விடுதியில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் மது போதை பழக்கத்தால் தினமும் 15 கொலைகள் நடைபெறுகின்றன. சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. இதற்கு காரணம் மதுதான். தமிழகத்தில் பூர்ண  மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழக கட்சி சார்பில் கடந்த  மே மாதம் 10 தேதி பேரணி நடத்திய ஆளுநர் மனு அளித்தோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மார்க் நிறுவனத்தில்  1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழலை ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு வழக்கு தொடர்வதற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம் தான்.! ஒரே போடாக போட்ட எல்.முருகன்! எப்படி தெரியுமா?

தமிழகத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு  ஆளாகி வன்முறையில்  ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மதுவால் திருப்பூர் பல்லடத்தில் 4 வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ் நாடே போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுமோ என அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு யார் கையில் இருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக அரசு எல்லாவற்றிலும் தோல்வி கண்டு வருகிறது. அதனை மறைத்து மடைமாற்றவே  சனாதனம் என்ற பூதாகரத்தினை கையில் எடுத்துள்ளனர். 

இதையும் படிங்க;-  தைரியம் இருந்தா.. இதுமாதிரி மசூதி.. சர்ச்ல சொல்லிப் பாருங்களே உதயநிதி.. மன்னார்குடி ஜீயர்..!

தோல்வியை மறைப்பதற்காக வேலைதான் திமுக எடுத்து உள்ளது. திமுக சொல்லும் சனாதனம் சமூகத்திற்கு கேடு இல்லை - திராவிடம் தான் தமிழ் சமூகத்திற்கு கேடாக உள்ளது. வெட்டிப்பேச்சை விட்டுட்டு 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். அதிமுக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக  கூட்டணி அசைத்து பார்க்க முடியாது வலுவாக உள்ளது. 2024 ல்  தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

click me!