டெல்லி செல்லும் ஓபிஎஸ்.. மறுபக்கம் சின்னம்மா, டிடிவி தினகரன்.. தூதுவிட்ட ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்.!

By Raghupati RFirst Published Sep 5, 2022, 10:07 PM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை  விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு,  இருவரும் நீதிமன்றத்தை மாறி மாறி நாடி வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார்.  இதனையடுத்து  பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

இதில்  ஆகஸ்ட் 17ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று  உத்தரவிட்டார்.  இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை இருநபர் அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இன்று அறிவித்த தீர்ப்பில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவினை  ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு நீதிபதிகளும்  தீர்ப்பு வழங்கினார். 

இதனை எதிர்த்து ஓபன்னீர்செல்வம் மேல்முறையீடு தொடரவிருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத், கல்லூரியில் படிக்கக்கூடிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமை பெண் திட்டம் சிறந்த திட்டமாகும். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும்.

மேலும் செய்திகளுக்கு..திராவிடியன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

தமிழக முதல்வருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சின்னம்மா, டிடிவி தினகரன் உள்ளிட்ட  அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும். வரக்கூடிய தேர்தலை அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் இணைந்து சந்திக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

click me!