அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித்துறை இல்லை.. மூட்டைப் பூச்சிக்கு பயந்து.? பங்கப்படுத்திய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 8:35 PM IST
Highlights

அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை திரும்பப் பெறுமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை திரும்பப் பெறுமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமெனில் அங்கு தொழிற்கல்வி வளர்ச்சி பெற வேண்டும், இப்படிப்பட்ட தொழிற்கல்விக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகளை அடியோடு மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும்,

அதன்மூலமாக தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுமாறும் அங்கு 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப் பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யுமாறும், அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வேறுபாடப்பிரிவுக்கு மாற்றுமாறும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

இதையும் படியுங்கள்: போலீஸ் கோபாலபுரத்தில் மாவாட்டுகிறதா? எல்லை மீறிய சி.வி சண்முகம்.. லுங்கியுடன் கைதாவாய்.. எச்சரித்த புகழேந்தி.

இதனடிப்படையில் தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன, இந்த செய்தி வெளியானதையடுத்து இது குறித்து உரிய விவரங்களை அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இதிலிருந்து அரசுக்கு தெரியாமலேயே அரசு பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி அதனைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்காமல், அவற்றையெல்லாம் மூடும் முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்திருப்பது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியதுமாதிரி என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

இது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரம்  பாதிப்படையவும், வேலை வாய்ப்புகள் இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது, எனவே அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து செய்யப்படுவது என்ற முடிவு கடும் கண்டனத்துக்குரியது. அரசு உடனே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!