சசி-பன்னீர் திட்டத்தில் மண்ணைப் போட்ட ஐகோர்ட்.. வருவதாக சொன்ன 30 தலைகள் ஜகா.. களமிறங்கிய இபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 8:13 PM IST
Highlights

தீர்ப்பு ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிராக வந்துள்ளதால் சசிகலா-பன்னீர் திட்டங்கள் முற்றிலுமாக தடைபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணிக்க வருவதாகச் சொன்னவர்கள் கூட இப்போது பிறகு பார்க்கலாம் என ஜகா வாங்குவதாகவும் அவர்களை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தன் பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது


.
 

தீர்ப்பு ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிராக வந்துள்ளதால் சசிகலா-பன்னீர் திட்டங்கள் முற்றிலுமாக தடைபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணிக்க வருவதாகச் சொன்னவர்கள் கூட இப்போது பிறகு பார்க்கலாம் என ஜகா வாங்குவதாகவும் அவர்களை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தன் பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜா அணி,  ஜெ அணி நிலைமையே தற்போது  ஓபிஎஸ் இபிஎஸ் அணி ஆக மாறியுள்ளது. அதிமுக விவகாரத்தைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவு திமுகவுக்கே சாதகமாக அமைந்துள்ளது, இது நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் கூட சரியாக வாய்ப்பு இல்லை என்பதால் இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் மூவரும் ஒன்றிணைந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி  தனது செல்வாக்கை முழுவதும் காட்டினாலும் அது திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை திமுக இருந்துவருகிறது. இதேபோல் ஓபிஎஸ் மீது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி இருந்தை வருகிறது, ஜெ சமாதியில் தியானம் அமர்ந்து கட்சியைச் உடைத்தவர் ஓபிஎஸ் என்றும், டிடிவி தினகரனை கட்சியைவிட்டு வெளியேற்றியவர் ஓபிஎஸ் என்றும்,  தன்னை நாம்பி உடன் இருந்தவர்களையே காப்பாற்றாமல் கைவிட்டவர் ஓபிஎஸ் என்ற அதிருப்தி, விமர்சனம் அவர் மீது உள்ளது.  

இதையும் படியுங்கள்: கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அதிமுக பொதுக்குழுவின் போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் சென்று கைப்பற்றியது அப்போது அங்கு கலவரம் நடக்க காரணமாக இருந்தவர் என்ற விமர்சனமும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உள்ளது. அதேபோல் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சசிகலா-பன்னீர் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது அதை அதிகம் கொண்டாடியவர் சசிகலாதானாம், அதனால் இந்த பிறந்தநாளை குடும்ப உறுப்பினர்களுடன் மிக உற்சாகமாக அவர் கொண்டாடினார், 

இதையும் படியுங்கள்:  நாடு முழுவதும் 14,500 பள்ளிகளுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு; தேசியக் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம்!!

ஆனால் தற்போது வந்துள்ள தீர்ப்பு அவர்களின் நம்பிக்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதேபோல் 30 சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் இழுக்க ஓபிஎஸ் சசிகலா டீம் திட்டம் போட்டதாகவும் அதற்கு 100 கோடி ரூபாய் வரை களமிறக்க சசிகலா தரப்பு ஓகே சொன்னதாகவும், 27 மாவட்ட செயலாளரிடம் சசிகலாவை நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென தீர்ப்பு ஓபிஎஸ் க்கு எதிராக அமைந்துள்ள நிலையில் தங்கள் பக்கம் வருவதாக வாக்கு கொடுத்தவர்கள் அனைவரும் பிறகு பாருக்கலாம் என ஜகா வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் மீண்டும்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. தீர்ப்பு சாதகமாக வந்த நிலையில்தான் அண்ணா பிறந்தநாள் விழாவை  எடப்பாடி கோட்டையான கோவைலையில் கொண்டாட சசிகலா பன்னீர் தரப்பில் திட்டமிட்டதாகவும் ஆனால் தீர்ப்பு எதிராக வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு தங்களுக்க கூட்டம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்ற தயக்கத்தில் அந்தக் கூட்டத்தை காஞ்சிபுரத்திற்கு மாற்றி உள்ளதாம் ஓபிஎஸ் சசிகலா தரப்பு.

மேலும், முக்குலத்தோர் சமுதாய மக்களிடமும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது, இதுதான் ஓபிஎஸ் சசிகலாவின் டீமுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. உயர்நீதி மன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் சசிகலாவின் அனைத்து திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடுள்ளதாகவும் கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்த பல பரபரப்புகளும் அதிரடிகளும் நடக்கலாம் என அதிமுக வட்டாரம் பரபரக்கிறது.  
 

click me!