கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

By Raghupati R  |  First Published Sep 5, 2022, 7:44 PM IST

சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், இந்த கோயில் புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழப்பெரும்ப ள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்த கோவில் முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயில் ஆகும். சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், இந்த கோயில் புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் பதவி டார்கெட்.! பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய ஸ்டாலின் - ராகுல் காந்தி” மாஸ்டர் பிளான் எடுபடுமா ?

திருப்பணிகள் நிறைவடைந்து  4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர். 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

பிறகு  கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கலெக்டர் லலிதா ஆகியோர் கலந்துகொண்டனர். நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து பகுத்தறிவுக்கு வந்த சோதனை, இதுதான் சுயமரியாதை கற்றுக்கொடுத்த இயக்கமா ? என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

click me!